நீரில் பிரசவம், பாலினம் சாராத பெயர்: நடிகை கல்கி கோய்ச்லின் திட்டம்
நீரில் பிரசவம், பாலினம் சாராத பெயர்: நடிகை கல்கி கோய்ச்லின் திட்டம் நடிகை கல்கி கோய்ச்லின் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தையை நீரில் பிரசவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாண்டிச்சேரியில் ஃபிரெஞ்ச் பெற்றோருக்குப் பிறந்தவர் கல்கி. நாடகங்கள் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். 'தேவ் டி' இவர் நடித்த முதல் படம். அந்தப் படத்தை இயக்கிய அனுராக் காஷ்யப்பை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து 'ஹாய் ஜவானி, ஹாய் திவானி', 'ஜிந்தகி நா மிலேகே தோபாரா', 'தி கேர்ள் இன் யெல்லொ பூட்ஸ்', சமீபத்தில் 'கல்லி பாய்' உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார். சமீபத்தில் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் முதல் பாடலில் நடனமாடியிருந்தார். 2013-ம் ஆண்டு அனுராக்கும், கல்கியும் மனமொத்துப் பிரிவதாக அறிவித்தனர். 2015-ல் விவாகரத்து பெற்றனர். அனுராக்குடனான மணமுறிவுக்குப் பிறகு இனி தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்கள் எதையும் ஊடகங்களில் அதிகம் பகிர விரும்பவில்லை என்று கல்கி கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாக கை ஹேர்ஷ்...