amazon big billion

பெண்களுக்கு அநீதி!இந்த உலகில்

ஓர் ஆண் இன்னொரு ஆணைத் திட்டுவது என்றாலும் கூட,அவனுடைய அம்மாவைத் திட்டும் மிகக் கேவலமான சமுதாயத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் .பெண்ணை வெறும் சதைப் பண்டமாகப் பார்க்கும் இழிகுணம் வேகமாக மிகுந்து வருகிறது.பெண்ணுக்குத் தனித்த உணர்ச்சிகளோ,ஆசைகளோ இருக்க விடாமல் பார்த்துக் கொள்வதில் மட்டும் இந்த ஆண்கள் வெகு கவனமாக இருக்கிறார்கள்.சந்தையில் விற்கப்படும் மாட்டைவிடக் கேவலமாக்கப்பட்டுவிட்டாள் பெண்.இல்லையென்றால் அண்மையில் டில்லியில் நடைபெற்ற நேரு நூற்றாண்டு நினைவு ஓட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்கும் மாட்டார்கள்.
     
பட்டப்பகல்;வெட்ட வெளிச்சம்;ராஜவீதியில் ஓட்டம்;தொடங்கி வைத்து பிரதமர்;இருபுறமும் மக்கள்; காவலுக்குப் போலீஸ்;திரளாக ஓடும் பெண்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ,ஓடும் பெண்களைச் சூழ்ந்து அவர்கள் இழிவாக நடத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.ஆண் சமுதாயத்தின் முகத்தில் எச்சில் வழிவதுபோல அறுவறுப்பாக உள்ளது இந்நினைவு.கண்ணால்,  கருத்தால்,  காட்சியால், நடவடிக்கையால் பெண்ணை இழிவுபடுத்தும் ஒரு சமுதாயம் தனக்குள் ஓர் அராஜக உணர்வை அழுத்தி வைத்துக் கொண்டிருக்கஇறது என்பதுதான் உண்மை. 
                                                                                                                   


பெண் என்பவர் நடமாடும் சதை அல்ல;கழனியில், களத்துமெட்டில் பள்ளியில்,மருத்துவமனையில் ,கல்லுரியில் ,ஆராய்ச்சி நிலையங்களில் ஆணுக்குச் சமமாக ,ஏன் பல  இடங்களில் ஆணை விட உயர்வாக வேலை செய்யும் உணர்ச்சியும் அறிவும் இணைந்த உயிர். இதை மதிக்கத் தெரியாத சமுதாயத்தில் நாகரீகம் என்பது நச்சுப் பேச்சாகும் .


சமுதாய அமைப்பு மாற்றத்திற்காகப் பாடுபடும் அனைவரும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.இந்தியாவில் இப்பாடி அநீதி நடப்பது இதயத்தில் எச்சில் உமிழ்ந்ததற்குச் சமமாகும் .அரசு உடனடி நடவடிக்கைஎடுக்காவிட்டால்,எதிர்காலத்தில் எல்லா ''புரங்களும்,''பவன்களும் தப்பிக்க முடியாது.எச்சரிக்கை!

Comments

Popular posts from this blog

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளர்

TikTok Said to Be Subject of US National Security Investigation

NAVARATRI 2019;WHAT YOU SHOULD DO AND AVOID DURING NAVARATRI FASTING